கொரோனாத் தொற்றைத் தடுக்க முடியாமல் திணறும் பிரான்ஸ்! மருத்துவர்கள் விடுத்த எச்சரிக்கை!! (வீடியோ)

இல்-து-பிரான்ஸ் உட்படப் பிரான்ஸின் நான்கு மாகாணங்கள் தொடர்ந்தும் கொரோனாத் தொற்றுப் பரவலின் அடிப்படையில் சிவப்புப் பகுதிகளாகவே பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பகுதிகளில் மக்கள் பொது இடங்களில் செல்லும் போதும், பல்பொருள் அங்காடிகளில் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போதும், பேருந்துகளில் பயணிக்கும் போதும் முகக்கவசங்களை அணியாமலும் பொது இடைவெளிகளைப் பேணாமலும் நடந்து கொள்கின்றனர்.  அதிலும் முக்கியமாக இல்-து-பிரான்சில் இது மிகவும் மோசமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.

இவ்வாறான மக்களின் நடவடிக்கைகள் எதிா்காலத்தில் மிகப் பெரிய ஆபத்தினையும், மிகவும் மோசமான இரண்டாம் கட்டத் தொற்றையும் ஏற்படுத்தப் போகின்றது என பொது மருத்துவர்கள், மருத்துவக் கலாநிதிகள், தொற்றியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

ஏற்கனவே இல்-து-பிரான்ஸ் உட்படச் சிவப்புப் பகுதிகள் முதற்சுற்றுத் தொற்றிலிருந்தே மீள்வதற்குச் சிரமப்படும் நிலையில், இரண்டாம் கட்டத் தொற்று, ஒரு பேரழிவிற்கு வழி வகுக்கும் என இவர்கள் எச்சரித்துள்ளனர்.
Previous Post Next Post