வேறொரு ஆணுடன் தொடர்பு! மட்டக்களப்பில் மனைவியைக் கொலை செய்த கணவன்!!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் பெண்ணொருவர் கொல்லப்பட்டது குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலய வீதியில் இரண்டு பிள்ளைகளின் தாய் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) கொலை செய்யப்பட்ருந்தார். 2 பிள்ளைகளின் தாயான துர்க்கா (34) என்பவரே கொல்லப்பட்டார். அவரது கணவனே கொலையை செய்தார் என பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

தம்பதியரிற்கிடையே சில காலமாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்த கொலை நடந்துள்ளது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பொலிஸ் தரப்பு தகவல்களின்படி, கணவன் சில காலமாக வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த காலப்பகுதியில், மனைவிக்கு வெறொரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கல்லாறு பகுதியில் பேக்கரி உரிமையாளரான அவர், உயிரிழந்த துர்க்காவின் வீட்டுக்கும் வந்த செல்ல தொடங்கியிருந்தார்.

இதை அறிந்த கணவன் சில முறை கண்டித்துள்ளார். இதனால் குடும்பத்திற்குள் தகராறும் ஏற்பட்டுள்ளது.

கொரோனா அபாயத்திற்கு முன்னர் நாடு திரும்பிய கணவன், அதனால் மீண்டும் வெளிநாடு செல்லவில்லை. தற்போது களுதாவளை பிள்ளையார் ஆலய உற்சவம் நடந்து வருகிறது. சம்பவ தினத்தில் ஆலயத்திற்கு சென்ற கணவன் அதிகாலை 5 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.

இதன்போது பேக்கரி உரிமையாளர் தனது வீட்டிலிருந்து வெளியேறுவதை அவதானித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியுடன் சண்டை பிடித்துள்ளார்.

இருவருக்குமிடையிலான தர்க்கம் உச்சமடைந்த போது ஆத்திரமிகுதியில் மனைவியின் தொண்டையை இறுக்கி அழுத்தியுள்ளார். இதனால் மூச்சுத்திணறலடைந்து துர்க்கா உயிரிழந்துள்ளார் என கணவன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
Previous Post Next Post