மூக்குக்குக் கீழ் முகக் கவசம் அணிந்த வியாபாரிகள்! சீல் வைக்கப்பட்டது நெல்லியடிப் பொதுச் சந்தை!!

நெலலியடி பொதுச்சந்தைக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா இடர்காலத்தில பிறப்பிக்கப்பட்ட லொக் டவுன் முடிவுக்கு வந்ததன் பின்னர், பொது வாழ்க்கையை படிப்படியாக மீட்டெடுக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.

இதன்படி இன்று 1ஆம் திகதி முதல் யாழ் மாவட்டத்தில் பொதுச்சந்தைகள் திறக்கலாமென்ற அறிவிப்பை யாழ் அரசாங்க அதிபர் விடுத்திருந்தார். இன்று நெல்லியடி பொதுச்சந்தையும் திறக்கப்பட்டது.

ஏற்கனவே, இன்று முகக்கவசம் இல்லாமல் யாரும் சந்தைக்குள் நுழைய முடியாது என பிரதேசசபை அறிவித்திருந்தது. இன்று சந்தை நடவடிக்கைகள் ஆரம்பித்தபோது, சுகாதார கட்டுப்பாடுகளை பேணியே செயற்பாடுகள் நடைபெற்றது.

மதியமளவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் பார்வையிடட போது, விற்பனையாளர்கள் இரண்டு, மூன்று பேர் முகக்கவசங்களை மூக்கிற்கு கீழே இழுத்து விட்டு விட்டு விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.

மூக்கற்கு கீழே முகக்கவசங்களை இழுத்து விட்டபடி வியாபாரத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை 2,3 பேர்தான் என பிரதேசசபை நிர்வாகம் தெரிவித்தது.

இது குறித்து பிரதேச செயலாளருடனோ, பிரதேசசபை தவிசாளருடனோ கலந்தாலோசிக்காமல், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சந்தைக்கு சீல் வைத்தார்.

மதியம் 1 மணிக்கு வந்து, அனைத்து வியாபாரிகளும் 30 நிமிடத்தில் சந்தையை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிடப்பட்டது. எனினும், வியாபாரிகள் வெளியேற காலதாமதமானது.

பிற்பகல் 2 மணிக்கு சந்தைக்கு சீல் வைக்கப்பட்டது. சந்தையை மீள ஆரம்பிப்பது பற்றிய கலந்துரையாடலின் போது, பொதுமக்களிற்கு சுகாதார அறிவுறுத்தல்களை வழங்கி, வர்த்தக நடவடிக்கையை ஒழுங்கமைக்க வேண்டுமென பிரதேசசபை நிர்வாகம், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

பொலிசார் மூலம் அந்த நடைமுறையை கண்காணித்து ஒழுங்கமைக்காமல், எடுத்தேன் கவிழ்த்தேன் என சந்தையை சீல் வைத்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post