யாழ்.திருநெல்வேலியில் பெண் மீது பிரதேச சபை ஊழியர் தாக்குதல் முயற்சி! (வீடியோ)

முகக் கவசம் அணியாது திருநெல்வேலிச் சந்தைக்கு வருகை தந்திருந்த பெண் ஒருவர் மீது நல்லூர் பிரதேச சபையின் ஊழியர் ஒருவர் தாக்குதல் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

குறித்த பெண் முகக் கவசம் அணியாது வருகை தந்திருந்த நிலையில் அங்கு கடமையில் இருந்த நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுடன் முரண்பட்டிருந்தார்.


அச் சமயம் இதனை பிரதேச சபை ஊழியர் ஒருவர் தனது தொலைபேசியில் வீடியோ எடுக்க, அப் பெண் அதனைத் தடுக்க முயற்சித்துள்ளார். இதனால் அப் பெண் மீது குறித்த ஊழியர் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டார்.

இச் சம்பவத்தின் போது அப் பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகர் அவர்களும் பெண் மீதான தாக்குதல் முயற்சியைக் கண்டித்துள்ளார்.

இதேவேளை அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுடன் குறித்த பெண், தான் முகக் கவசம் அணியாது வந்தமையை நியாயப்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தாக்குதல் முயற்சியை மேற்கொண்ட ஊழியர் மீது தனது தலைக் கவசத்தினால் குறித்த பெண் தாக்குதல் நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post