யாழ். கைதடி சித்த மருத்துவ பீட மாணவிக்கு கொரோனா அறிகுறி!

யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் பொலநறுவையைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக அவர் நோயாளர்காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னரேயே அவர் பொலநறுவையில் இருந்து யாழ்ப்பாணம் வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

காய்ச்சல் உட்பட்ட கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுவதால் அவருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்னர் எழுவைதீவுக்கு வந்திருந்த பொலநறுவையைச் சேர்ந்த நீர்வழங்கல் வடிகாலமைப்பு ஊழியர் ஒருவரும் கொரோனா அறிகுறிகளுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post