சரவணபவனின் செயற்பாட்டாளரின் வீட்டின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான ஈ.சரவணபவனின் செயற்பாட்டாளர் ஒருவரின் வீடு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

நேற்றிரவு சங்கானையைச் சேர்ந்த அனந்தன் என்கின்ற இளைஞரின் வீடு மீதே தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சங்கானை முதலாம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள குறித்த வீட்டிற்குள் நுழைந்த எண்மர் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலிஸ் விசாரணையின் பின்னரே உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Previous Post Next Post