பிரான்ஸில் எல்லை மீறும் கொரோனா! இழுத்து மூடப்படும் இடங்கள்!!

பிரான்சில் மீண்டும் கொரோனாத் தொற்றின் வேகமும், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்கள் தொகையும், தீவர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்கள் தொகையும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

இதன் காரணமாகப் பல பிராந்தியங்கள் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன.

இதனடிப்டையில் பல கடற்கரைகள் பொதுமக்களிற்குத் தடை செய்யப்பட உள்ளன. இதனடிப்படையில் Morbihan இலுள்ள முக்கிய கடற்கரையான Quiberon கடற்கரைகள், இரவு 21 மணியிலிருந்து காலை 7 மணிவரை முடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் இங்குள்ள அருந்தகங்களும் (Bar) மேற்குறிப்பிட்ட நேரத்தில் மூடப்பவேண்டும் என்ற உத்தரவும் வழங்கப்பட்டுள்ளன.

இங்கு தற்போது கொரானாத் தொற்று ஏற்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் 18 முதல் 25 வயதிற்குப்பட்டவர்கள் என்பது அதிர்ச்சிக்குரிய விடயமாகும்.
Previous Post Next Post