ஐ.தே.க. யாழ். மாவட்ட அமைப்பாளரது சிபாரிசில் பணி நியமனம் பெற்ற 15 பேர் அதிரடியாக நீக்கம்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
ஐ.தே.க. யாழ். மாவட்ட அமைப்பாளரது சிபாரிசிற்கமைவாக கடந்த ஐ.தே.கட்சியின் ஆட்சிக் காலத்தில் யாழ். மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்ட 15 உத்தியோகத்தர்கள் நேற்று முன்தினம் முதல் முழுமையாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.தே.கட்சியின் ஆட்சிக் காலத்தில் யாழ். மாவட்ட அமைப்பாளரின் சிபாரிசில் சமுர்த்தி வங்கிகளில் நிலவிய கணனித் தரவாளர்கள் வெற்றிடங்களிற்கு 15 பேர் நாள் சம்பள அடிப்படையில் நியமிக்கப்பட்டிருந்தனர்.


2019ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நியமிக்கப்பட்டபோதும் கடந்த ஆண்டு இறுதி வரையில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட சம்பளம் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் முழுமையாக நிறுத்தப்பட்டபோதும் தொடர்ந்தும் பணியாற்றியுள்ளனர்.

இதன் காரணமாக குறித்த விடயம் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும் வழக்குத் தாக்கலில் இருந்த குறையின் காரணமாக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இவ்வாறு வழக்கும் தள்ளுபடியான நிலையில் நேற்று முன்தினம் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் இந்த பணியாளர்களை பணியில் வைத்திருப்பின் நீங்களே பொறுப்பாளிகள் என சமுர்த்தி வங்கிகளிற்கு கடிதம் அனுப்பியது . இதன் காரணமாக அத்தனை பேரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post