பிரான்ஸில் கொரோனா! இரண்டாவது நாளாகவும் 3000 தாண்டிய தொற்று!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3000 இனைத் தாண்டியுள்ளது.

நேற்று (16/08/2020) ஞாயிற்றுக்கிழமை 3,000 இற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என பொது சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் பிரான்சில் 3,015 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, இதே காலப்பகுதியில் 17 புதிய தொற்று வலையங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் சனிக்கிழமை பிரான்சில் 3,310 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று இரண்டாவது நாளாக மூவாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் தற்பொழுது பிரான்சில் புதிதாக உறுதி செய்யப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17,314 ஆக உயர்ந்துள்ளது.மொத்த மரண எண்ணிக்கை 30 410.

இதனால் வைத்தியசாலைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
Previous Post Next Post