போரால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தியாகி அறக்கொடையால் வீடு கையளிப்பு! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
போரால் பாதிக்கப்பட்டு குடிசை வீடொன்றில் வசித்த புங்குடுதீவைச் சேர்ந்த குடும்பம் ஒன்றுக்கு புதிதாக அமைக்கப்பட்ட கல் வீடு இன்று கையளிக்கப்பட்டது.

தியாகி அறக்கொடை நிதியத்தின் நிதிப் பங்களிப்புடன் இராணுவத்தினரின் கட்டட பொறியல் பிரிவால் இந்த வீடு அமைக்கப்பட்டது.

தியாகி அறக்கொடையின் இயக்குனர் தியாகேந்திரன்இ யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி இணைந்து இன்றைய தினம் பயனாளியிடம் வீடு கையளிக்கப்பட்டது.

வன்னியில் போரால் பாதிக்கப்பட்டு புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தில் வசியும் தவராசா கவிதா என்ற பயனாளிக்கே இந்த வீடு வழங்கப்பட்டது.

வீட்டுக்கு தியாகி அறக்கொடை நிறுவன இயக்குனரால் 15 லட்சம் ரூபாய் நிதிப் பங்களிப்பில் இந்த வீடு இரண்டு மாதங்களும் 9 நாள்களுக்குள் ராணுவத்தினரால் அமைத்து முடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post