யாழில் ஊடகவியலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் அடித்து நெருக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு இடம்பெற்ற இச் சம்பவத்தில் வலம்புரிப் பத்திரிகையில் அலுவலகச் செய்தியாளராகக் கடமையாற்றும் விஜயநாதன் ஜனார்த்தனன் (வயது-21) என்ற ஊடகவியலாளர் மீதே இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பணி முடிந்து வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது யாழ்.பிறவுண்வீதி, இரண்டாம் ஒழுங்கையில் இடைமறித்து இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


முகத்தை துணிகளால் மறைத்தவாறு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இரும்புக் கம்பி ஒன்றினால் தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது ஊடகவியலாளரின் கைப் பகுதியில் காயம் ஏற்பட்டதுடன், அவரின் மோட்டார் சைக்கிள் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post