உயிருக்குப் போராடிய தந்தையைக் காப்பாற்றிய 5 வயது மகள்! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வலிப்பு நோயால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தந்தையை 5 வயது சிறுமி சமயோசிதமாக செயல்பட்டு காப்பாற்றிய சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

லண்டனில் மனைவி மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வருபவர் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட தமிழர் சாம் சூரியகுமார்.

தற்போது 34 வயதாகும் சூரியகுமாருக்கு அவரது மூளையில் புற்றுநோய் தொடர்பான கட்டி இருப்பது கடந்த பெப்ரவரியில் கண்டறியப்பட்டது.

அப்போதிலிருந்தே குடியிருப்பிலேயே ஓய்வில் இருந்து வருகிறார் சூரியகுமார். இந்த நிலையில் சமீபத்தில் ஒருநாள் இவருக்கு திடீரென்று வலிப்பு நோய் வந்துள்ளது.

மருத்துவராக பணியாற்றும் அவரது மனைவி சிந்துவும் அன்று வேலைக்குச் சென்ற நிலையில், சமயோசிதமாக செயற்பட்ட சூரியகுமாரின் 5 வயது மகள் அவானா சாமுவேல், தமது தந்தைக்கு மருத்துவ உதவி கிடைக்க உதவியுள்ளார்.

சம்பவத்தின் போது சிறுமி அவானா சாமுவேல், தனது மூன்று வயது தங்கை ஆர்யாவையும் அழைத்துக் கொண்டு, அருகில் உள்ள அறைக்கு சென்று மருத்துவமனையில் இருக்கும் தாயார் சிந்துவுக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார்.

பின்னர் அவசர மருத்துவ உதவிக் குழுவினருக்கும் அழைத்து உதவி கோரியுள்ளார்.

அவர்கள் அளித்த வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றி, தந்தையை பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.

தமது மகள்களின் சமயோசித செயற்பாடே தான் இப்போது உயிருடன் இருக்க காரணம் என சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமி அவானா சாமுவேலுக்கு அவரது பாடசாலையில் இருந்து துணிச்சலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post