ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது பிரான்ஸை நிலைகுலைய வைத்த துப்பாக்கிச் சூடு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சை நிலைகுலையவைத்த துப்பாக்கிச்சூடு குறித்த ஒரு சம்பவம் இன்று மீண்டும் பிரான்ஸ் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியுள்ளது.

2015ஆம் ஆண்டு, முகமது நபியைக் குறித்து சர்ச்சைக்குரிய கார்ட்டூன் வெளியிட்டதாகக் கூறி, இரண்டுபேர் Charlie Hebdo என்னும் பிரெஞ்சு பத்திரிகை அலுவலகம் ஒன்றிற்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.

அந்த பயங்கர சம்பவத்தில், புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்டுகள் உட்பட அந்த பத்திரிகை அலுவலக ஊழியர்கள் 12 பேர் கொல்லப்பட்டார்கள்.

குற்றவாளிகளான Said மற்றும் Cherif Kouachi ஆகிய இருவரும் பிடிபட்ட நிலையிலும், அவர்களை விடுவிக்கக்கோரி அவர்களது மற்றொரு கூட்டாளியாகிய Amedy Coulibaly என்பவன் சிலரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டதோடு ஒரு இளம் பெண் பொலிசாரையும் கொன்றான்.

பொலிசார் நடத்திய ரெய்டுகளின்போது அவன் பிடியிலிருந்த நான்கு பிணைக்கைதிகள் கொல்லப்பட்டதோடு குற்றவாளிகள் முவரும் கொல்லப்பட்டார்கள்.

இந்நிலையில், அந்த குற்றவாளிகளுக்கு உதவியதாக 13 ஆண்கள் மற்றும் பெண்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கொரோனா காரணமாக அந்த வழக்கு விசாரணை தடைபட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கியதைக் குறிப்பிடும் வகையில், Charlie Hebdo பத்திரிகை, 2015இல் வெளியிடப்பட்ட அதே சர்ச்சைக்குரிய படங்களை மீண்டும் வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம்தான் இன்று பெரும்பாலான பிரெஞ்சு ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகியுள்ளது.
Previous Post Next Post