தேசிய கரித்தாஸ் நிலைய உத்தியோகத்தர்களின் தீவகப் பகுதிகளுக்கான கள ஆய்வு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் கரித்தாஸ்-கியூடெக் நிறுவனத்தினால் நடைமுறைபடுத்தப்பட்டு வரும் “வறுமைக்கான காரணங்களை கவனத்தில் கொள்ளலும் விவசாயிகளுக்கான உணவு பாதுகாப்பை உறுதி செய்தலும்” நிகழ்ச்சித்திட்டத்தின் இந்த ஆண்டிற்கான செயற்பாடுகள் ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதில் 13 கிராம சேவையாளர் பிரிவின் 570 குடும்பங்களை சேர்ந்த வீட்டுத்தோட்ட பயனாளிகளும் 27 முன்பள்ளிகளை சேர்ந்த சிறார்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களும், 04 பாடசாலைகளை சேர்ந்த 1034 மாணவர்களும் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டு இவர்களிற்கான கொடுப்பனவுகளாக வீட்டுத்தோட்டம் செய்யும் குடும்பங்களிற்கு விதை தானியங்களும், விவசாய உபகரணங்களும், வீட்டுத்தோட்ட விவசாய செய்முறை கையேடுகளும் வழங்கப்பட்டது. முன்பள்ளி சிறார்களிற்கு போசாக்கு சத்துணவும் அவர்களின் பெற்றோருக்கு வீட்டுத்தோட்ட விதை தானியங்களும், செய்முறை கையேடுகளும் வழங்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை மாதிரி தோட்டம் அமைப்பதற்கு விதை தானியங்களும் செய்முறை கையேடுகளும் தோட்டம் அமைப்பதற்கான உபகரணத் தொகுதிகளும் வழங்கப்பட்டன.

இச்செயல்திட்டங்களை மேற்பார்வை செய்வதற்காக தேசிய கரித்தாஸ் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் திருமதி நிலானி திசேரா அவர்களும் தமிழ் மறை மாவட்டங்களின் இணைப்பாளர் திரு நிசாந் அவர்களும் வருகை தந்து நேற்றும் நேற்று முன்தினமும் கள ஆய்வினை மேற்கொண்டிருந்தனர். இந்த செயற்பாட்டின் முதன் நாளில் பாடசாலைகளிற்கான ஆய்வினை வேலணை மத்திய கல்லூரியிலும் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் மேற்கொண்டிருந்தனர்.


அதன் பின்னர் அனலைதீவிற்கான விஜயத்தினை மேற்கொண்டு முன்பள்ளி சிறார்களின் பெற்றோரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் வீடுகளில் மேற்கொள்ப்பட்டு வரும் வீட்டுத்தோட்ட செயற்பாடுகளையும் கண்காணித்தனர்.

கள ஆய்வின் 2ம் நாளில் ஊர்காவற்துறை பிரதேசத்தின் கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள பயனாளிகளின் வீட்டுத்தோட்டங்களையும் பார்வையிட்டனர்.

அன்றைய நாளில் தம்பாட்டி கிராமத்தின் பொது மண்டபத்தில் நடைபெற்ற “சந்தைப்படுத்தல் முகாமைத்துவம்” தெடர்பான பயிற்சி வகுப்பிலும் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர். பயிற்சி வகுப்பின் வளவாளராக சண்டிலிப்பாய் பிரதேச செயலக திறன் அபிவருத்தி உத்தியோகத்தர் திரு. நீலாம்பரன் கலந்து கொண்டார்.

இந்த பயிற்சி வகுப்பில் வீட்டுத்தோட்ட செயற்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட சமூக மட்ட குழுக்களின் உறுப்பினர்களும் பயனாளிகளும் பங்குபற்றி பயன்பெற்றனர். அத்துடன் தமது சிறு சுயதொழில் முயற்சியில் கிடைக்கும் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து இலாபம் ஈட்டும் செயற்பாடுகளும் நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பில் யாழ்ப்பாணம் கரித்தாஸ்-கியூடெக் நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் பங்குபற்றினர்.Previous Post Next Post