பிரான்ஸில் 18,746 பேருக்கு ஒரே நாளில் கொரோனாத் தொற்று! 80 பேர் உயிரிப்பு!!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
ஒக்டோபர் 7 ஆம் திகதி இதுவரை இல்லாத அளவு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. 
 
பிரான்ஸ் சுகாதார துறை வெளியிட்ட தகவல்களின் படி, கடந்த 24 மணிநேரத்தில் 18,746 பேருக்கு கொரோனா தொற்று எற்பட்டுள்ளது. ஒரே நாளில் அதிகபட்சமாக 16,972 பேருக்கி தொற்று ஏற்பட்டிருந்ததே இதுவரையான சாதனையாக இருந்த நிலையில், இன்று புதிய சாதனை பதிவாகியுள்ளது.

அதேவேளை, தொற்று வீதம் 9% இல் இருந்து 9.1% வீதமாக அதிகரித்துள்ளது. இதுவரை பிரான்சில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 653,509 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 80 பேர் சாவடைந்துள்ளனர். மொத்த சாவு எண்ணிக்கை 32,445 ஆக உயர்வடைந்துள்ளது.

919 பேர் கடந்த ஒரு வாரத்தில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post