இலங்கையில் 22 வது கொரோனா மரணம் - 27 வயதான இளைஞன் உயிரிழப்பு!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இலங்கையில் கோவிட் -19 நோய்த் தொற்றால் 22ஆவது நபரும் உயிரிழந்துள்ளார்.

பாணாந்துறையைச் சேர்ந்த 27 வயதுடைய ஆண் தற்கொலை செய்த நிலையில் கோவிட் -19 தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாணந்துறை ஆரம்ப வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் (ஒக்.31) சனிக்கிழமை அவரது சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவருக்கு கோவிட் -19 நோய் உள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை நாட்டில் 11 ஆயிரத்து 60 பேர் கோரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 ஆயிரத்து 905 பேர் சுகமடைந்துள்ளனர். 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, அவரது உயிரிழப்புக்கு தற்கொலை காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவிட் -19 நோயால் உயிரிழந்துள்ளோரின் பட்டியலில் இணைத்தமை விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post