கிளிநொச்சியில் பிறந்த சிசுவை மண்ணில் புதைத்த பெண்! மயங்கி விழுந்ததால் பிடிபட்டார்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கிளிநொச்சி – பிரமந்தனாறு பகுதியில் இன்று மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தமை கண்டறியப்பட்டது. இந்நிலையில் பிறந்த தனது குழந்தையை மண்ணில் புதைத்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

“பிரமந்தனாறு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று (13) மதியம் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை பிறந்ததை கண்டறிந்த நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அங்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனக்கு குழந்தை பிறந்ததாகவும், குறித்த குழந்தையை புதைத்துவிட்டதாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் குழந்தை புதைக்கப்பட்ட இடம் தொடர்பான தகவலில் உள்ள குழப்பம் காரணமாக சம்பவ இடத்தை கண்டுபிடிப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது” – என தெரியவருகிறது.
Previous Post Next Post