யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவரிடம் இன்று பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என்று யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை தெரிவித்தது.

இதேவேளை, முதல்வரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கடந்த 20ஆம் திகதிக்கு பின்னர் தன்னுடன் நேரடியாக தொடர்பு கொண்டோரை அவதானமாக இருக்குமாறு யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிகழ்வில் முதல்வரும் கலந்து கொண்ட நிலையில் இன்றைய தினம் முதல்வர் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்டுள்ளதுடன் தன்னை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார்.

அதேவேளை 20ஆம் திகதிக்கு பின்னர் தன்னுடன் நேரடியாக தொடர்பு கொண்டோர், தம்மை தனிப்படுத்தி கொள்ளுமாறும் முதல்வர் கோரியுள்ளார்.

Previous Post Next Post