யாழில் கொரோனாத் தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணத்தில் கோவிட் -19 நோயினால் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் -19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.

வடமராட்சி உடுப்பிட்டியைச் சேர்ந்த 88 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முதியவர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பயனளிக்காது இன்று பிற்பகல் 3 மணிக்கு அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பும் காரணம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தால் அறிக்கையிடப்பட்டுள்ளது.

முதியவரின் சடலம் நாளை யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் மயானத்தில் மின் தகனம் செய்யப்படவுள்ளது.
Previous Post Next Post