கனடாவில் இலங்கைத் தமிழருக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்!


கனடாவில் இலங்கைத் தமிழர் ஒருவருக்கு அதிஷ்டலாப சீட்டிழுப்பில் பெருந்தொகை பணம் கிடைத்துள்ளது.

சன்சீ கப்பல் மூலம் கனடாவுக்கு சென்று புகலிடம் கோரிய பிரென்கிஸ் கிறிஸ்துராஸா என்பவருக்கு ஒரு இலட்சத்து 25 ஆயிரம் டொலர் பரிசாக கிடைத்துள்ளது.

அவர் கனடாவின் வான்கூவர் பிரதேசத்தில் வசித்து வருகின்றார்.

முதலில் ரிக்கெட்டில் உள்ள இலக்கத்தைத் தொலைபேசியில் பரிசோதித்துப் பார்த்த போது, எங்களுக்குப் பணப் பரிசு கிடைத்துள்ளதை என்னால் நம்ப முடியவில்லை என கிறிஸ்துராஜாவின் மகள் தெரிவித்துள்ளார்.

நானும் எனது மகளும் இணைந்து இந்த ரிக்கெட்டைப் பெற்றுக் கொண்டதாகவும், இவ்வாறு கிடைத்த பணத்தை எனது பிள்ளைகளின் கல்விச் செலவுக்காகப் பயன்படுத்தவுள்ளதாகவும் கிறிஸ்துராஜா தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post