அல்லைப்பிட்டி விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டம்! 19 பேர் சுயதனிமைப்படுத்தலில்!!


அல்லைப்பிட்டியில் உள்ள விடுதியில் பிறந்தநாள் கொண்டாடிய 19 பேர் அதே விடுதியில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், விடுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற 19 பேர் நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு முற்பட்டுள்ளனர்.

அதனை அறிந்த அந்தப் பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர், ஊர்காவற்றுறை பொலிஸாருடன் சென்று தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக 19 பேரையும் அந்த விடுதியிலேயே சுயதனிமைப்படுத்தினார்.

அத்துடன், நட்சத்திர விடுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

சுயதனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Previous Post Next Post