யாழில் மோட்டார் சைக்கிள்- துவிச்சக்கர வண்டி விபத்து! முதியவர் உயிரிழப்பு!!

பால் விற்பனையில் ஈடுபட்டு விட்டு வீடு திரும்பிய முதியவர், வீட்டு வாசலின் முன்பாக இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி சாந்தகுணமூர்த்தி (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த முதியவர் துவிச்சக்கர வண்டியில் பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவராவார். அவர் நேற்றைய தினமும் வழமை போன்று பால் வியாபாரத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பி , வீட்டு வாசலின் முன்பாக வீதியை கடக்க முற்பட்ட போது , அராலியில் இருந்து யாழ்.நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானார்.

விபத்துக்கு உள்ளான முதியவரை மீட்டு வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

அதனை அடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post