பிரித்தானியாவில் ஒமிக்ரோன் தொற்றால் முதலாவது மரணம் பதிவானது!


பிரித்தானியாவில் ஒமிக்ரோன் மாறுபாட்டுடன் முதலாவது மரணம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாட்டால் இங்கிலாந்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.

இந்நிலையில், பொது மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இங்கிலாந்தில் ஒமிக்ரோன் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், எச்சரிக்கை நிலை மூன்றில் இருந்து நான்காக உயர்த்தி அந்நாட்டு அரசு அறிவிப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post