யாழில் கொரோனா பரவ நான் காரணம் இல்லை! காணொளி வெளியிட்ட சுவிஸ் போதகர்!! (வீடியோ)

யாழில் கொரோனா பரவ தான் காரணம் இல்லை என யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவ காரணம் என கூறப்படும் சுவிஸ் போதகர் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில்,

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இலங்கை தேசத்திற்கு நானும் எனது சபையாரும் அநேக தரம் வந்து போகின்றோம். அதற்கு காரணம் என்னவென்றால் நானும் எனது சபையார் யாவரும் இலங்கை தேசத்தையும் இலங்கை மக்களையும் அதிகமாக நேசிக்கின்றோம்.

அதிகமாக உபவாசத்தோடு கூட சபை மக்களாய் சேர்ந்து இலங்கைக்காக இலங்கை மக்களுக்காக பிரார்த்தனைகளை முன்னெடுத்திருக்கிறோம். அதேபோல தான் கடந்த மார்ச் மாதம் பத்தாம் திகதி கொழும்பு விமான நிலையத்தில் நானும், என்னுடைய மனைவியுமாக வந்து இறங்கினோம்.

வியாதிகளை கண்டறியும் கருவிகள் ஊடாக நாம் சென்றோம். எங்களுக்கு ஒரு வியாதியும் அங்கே இருக்கவில்லை. நாங்கள் வந்த காரியங்களை சீக்கிரமாக முடித்துக் கொண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கே எல்லா வழிப்பாட்டு தலங்களிலும் வழிபாடுகள் நடந்தன.

அதேபோல் எங்களுடைய சபையிலும் வழிபாடுகளை நாங்கள் நடத்தினோம். அங்கே எல்லாரும் வரவில்லை. அருகிலிருந்த குறிப்பிட்ட சிலரே வந்திருந்தனர்.

நாங்கள் எங்களுடைய ஆராதனையை எந்த செய்தி தாளிலும் விளம்பரம் செய்யவில்லை. சாதாரணமாய் ஆராதனை நடத்தினோம். சீக்கிரமாக ஆராதனையை முடித்து விட்டு சீக்கிரமாக அனைவரையும் அனுப்பி விட்டு நான் கொழும்புக்கு கிளம்பி விட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ள விடயம் காணொளியில்,
Previous Post Next Post