ஒரு முறையேனும் பேசத் துடித்த முருகன்! நிறைவேறாமல் பிரிந்தது தந்தையின் உயிர்!!

ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முருகனின் தந்தையார் வெற்றிவேல் புற்றுநோய்த் தாக்கம் காரணமாக இன்று காலை யாழ்ப்பாணம் சாவகச்சேரி தனியார் மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்துள்ளார்.

“உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள தந்தையுடன், ஆயுள் தண்டனை சிறைவாசி முருகன் என்ற ஸ்ரீகரன் (மத்திய சிறை, வேலூர்) காணொளி அழைப்பு ஊடாக பார்த்து பேச உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருகனின் சட்டத்தரணி புகழேந்தியால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவசர கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இருப்பினும் அவர்கள் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரியவருகிறது. நோய்த் தாக்கத்தினால் சாவகச்சேரி நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவருடைய இறுதி நிகழ்வுகள் நாளை பளை, இத்தாவிலில் உள்ள அவருடைய இல்லத்தில் நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post