யாழில் குடிபோதையில் காரைச் செலுத்தி விபத்து! வீதியோரங்களில் நின்ற வாகனங்கள் சேதம்!! (படங்கள்)

மதுபோதையில் காரினை செலுத்தி வந்த நபர் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

நிறை மது போதையில் காரினை செலுத்தி வந்த நபர் ஒருவர், வெலிங்கடன் சந்திக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சைக்கிள்கள் மற்றும் மோட்டர் சைக்கிள்கள் என்பவற்றுடன் மோதி விபத்து உள்ளாகியுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னேடுதத்துடன், மதுபோதையில் காரை செலுத்தியவரை கைது செய்ததுடன், காரையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.

நீண்ட காலத்திற்கு பின்னர் நேற்றைய தினம் மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டதனையடுத்து, மதுபோதையில் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அங்காங்கே நடைபெற்று வருகின்றன.

Previous Post Next Post