யாழில் நீண்ட நாள் பகையால் நடந்த விபரீதம்! ஒருவர் படுகாயம்!!

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாசியப்பிட்டியில் நீடித்த பகை காரணமாக இருபதுக்கும் மேற்பட்டோர் கொண்ட குழு ஒன்று வீடொன்று மீது தாக்குதல் நடத்தியதுடன், அந்த வீட்டில் ஒருவரை தாக்கியும் உள்ளது.

இந்தச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

“சம்பவம் இடம்பெற்ற வீட்டைச் சேர்ந்த மற்றொரு பகுதியைச் சேர்ந்தவர்களுடன் நீண்ட நாள்காக முரண்பட்டு வந்துள்ளார். அந்தப் பகையைத் தீர்க்க அந்தப் பகுதியைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இன்று அந்த நபரின் வீட்டுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த நபர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர் உடனடியாக சங்கானை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். எனினும் சம்பவம் இடம்பெற்று ஒரு மணி நேரத்துக்கு மேலாக அங்கு மானிப்பாய் பொலிஸார் செல்லவில்லை. வீதி ரோந்திலிருந்த தெல்லிப்பழை பொலிஸாரே சம்பவ இடத்தில் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர்.
Previous Post Next Post