யாழ். ஆரியகுளம் சந்தியில் விபத்து! ஒருவர் உயிரிழப்பு!! (படங்கள்)இரண்டாம் இணைப்பு-
மினி பஸ் – மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். பலாலி வீதி – பருத்தித்துறை வீதி இணையும் சிராம்பியடிச் சந்தியில் இன்று காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

பண்டத்தரிப்பு (பெரிய குஞ்சுக்குளம்) பற்றிமா வீதியைச் சேர்ந்த அருளப்பு சிறிசோலோகு (வயது-50 ) பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே உயிரிழந்தார்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பொறியியல் பீடம், தொழில்நுட்ப பீடம் மற்றும் விவசாய பீடத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களை யாழ்ப்பாணத்திலிருந்து ஏற்றிச் செல்லும் மினி பஸ்ஸே விபத்துக்குள்ளாகியது.

சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பத் தலைவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.முதலாம் இணைப்பு
யாழ்.ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

யாழ்.பல்கலைகழக பேருந்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே உயிரிழந்துள்ளார்.


Previous Post Next Post