யாழில் பெற்றோரின் வெளிநாட்டு மோகம்! இளம் பெண்ணின் உயிரைப் பறித்த பரிதாபம்!!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
 
சாவகச்சேரி கிழக்கில் 22 வயதுப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரை மாய்த்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக காதலைத் தியாகம் செய்யக் கோரி வீட்டுக் காவலில் அவர் வைக்கப்பட்டிருந்தார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரிப் பொலிஸார் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

நீதிவானின் பணிப்பின் பேரில் சடலம் சாவகச்சேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணையின் பின்னர் உடற்கூற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post