பிரான்ஸில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு! மக்களின் உயிர்களில் விளையாடுகிறது அரசு!!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்ஸில் ஒரு மாத காலமாக நடைமுறைப்படுத்தபட்டிருந்த கொரோனாக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் (24) தொலைக்காட்சி ஊடாக உரையாற்றிய நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் இதனை அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மக்ரோனின் இந்த கொரோனாத் தடுப்புக் கட்டுப்பாடுகளின் தளர்வு அறிவிப்பு என்பது வெறுமனமே பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு, அரச தரப்பால் எடுக்கப்பட்ட அல்லது தீர்மானிக்கப்பட்ட ஒரு விடயமே தவிர கொரோனாவின் தாக்கம், தொற்று வீதத்தின் எண்ணிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டதல்ல.

அரச தரப்பால் அறிவிக்கப்பட்டிருக்கும் இத் தளர்வின் தாக்கம், எதிர்காலத்தில் பிரான்ஸ் பேரழிவைச் சந்திக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளிவிடும்.

அதாவது பொருளாதாரத்தின் முக்கியத்துவமும், பெரு வணிகத்தின் வியாபார நோக்கமுமே இந்த தளர்வு அறிவிப்புக்குக் காரணமாகின்றது.

வரப்போகும் நத்தார் மற்றும் புதுவருட வியாபார வணிகத்துக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கும், விட்ட பொருளாதாரத்தை ஈடு செய்வதற்குமே இத் தளர்வை ஏற்படுத்தி மக்களின் உயிர்களில் விளையாடுகிறது பிரான்ஸ் அரசு.

பொருளாதாரத்தை நோக்காகக் கொண்டு தளர்வு அறிவுப்புக்களால் நத்தார் தினக் கொண்டாட்டங்கள், வியாபாரங்கள் எல்லாம் முடிந்த பின், விட்ட இடத்திலிருந்து கொரோனா தனது தாக்கத்தைக் காட்டத் தொடங்கும் என்பது நிறுத்திட்டமான உண்மை.

எனவே இவ்வருட நத்தார் இல்லை எனில் அடுத்த வருடம் கொண்டாடலாம். இம் முறைதான் நத்தாரைக் கொண்டாட வேண்டும் எனில் அடுத்த வருடம் நத்தார் தினம் வரும் ஆனால் நாம் இருக்க மாட்டோம் என்பதுதான் கடந்த காலங்களில் கொரோனா உணர்த்திய பாடம்.

எனவே அரசு தனது இருப்பையும் பொருளாதாரத்தையும் நிச்சயமாக முதன்மைப்படுத்தி அறிவுப்புக்களை விடுகின்றதுவே தவிர, கொரோனா இதுவரைக்கும் எவ்வித தளர்வுப்போக்கையும் கொண்டிருக்கவில்லை.

பிரான்ஸைப் பொறுத்தமட்டில் தொற்றுக்களும், உயிரிழப்புக்களும் ஓய்ந்ததாகத் தெரியவில்லை. இதனிடையே நத்தாருக்கும், புதுவருடத்துக்கும் அமுல்படுத்தப்பட்டிருக்கும் சிறிய கட்டுப்பாடுகளையும் முற்றாக நீக்குவதென்பது ஆரோக்கியமானதல்ல.

எனவே கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் அரச தரப்பால் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவே தவிர கொரொனா அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

ஆகவே, மக்கள் தங்களின் சுய பாதுகாப்பு விடயத்தில் இம்மியும் தளர்வுப் போக்கை ஏற்படுத்தாது, சுகாதாரத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள கொரோனாத் தடுப்பு வழிமுறைகளை சரியாகப் பின்பற்றி உங்களையும் உங்களைச் சார்ந்தோரையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
Previous Post Next Post