திங்கள் முதல் அடையாள அட்டை கடைசி எண் நடைமுறை! வேலைக்குச் செல்வோருக்குப் பொருந்தாது!!


அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டை அடிப்படையிலான முறையைப் பின்பற்றி நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் வீடுகளிலிருந்து வெளியேறத் தவறும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சிவில் உடைகள் மற்றும் சீருடை ஆகிய இரண்டிலும் ஏராளமான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கமாட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

தேசிய அடையாள அட்டை இறுதி எண் முறையை பின்பற்றத் தவறியது குறித்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நபர்கள் எச்சரிக்கப்பட்டனர். எனினும் நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் முறைமையை மீறும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள்.

இருப்பினும், தினசரி கடமைக்குச் செல்வோருக்கு இந்த முறைமை பொருந்தாது.

மருத்துவமனைகளுக்குச் சென்று அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோரைத் தவிர, எந்தவொரு நபரும் இன்றும் நாளையும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்க மாட்டார்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
Previous Post Next Post