லண்டனிலிருந்து வந்து காணாமல் போன பெண்ணின் சடலம் பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்பு! 19 வயது இளம் குடும்பஸ்தர் கைது!! (படங்கள்)


லண்டனில் இருந்து திரும்பி கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் தனிமையில் வசித்திருந்த நிலையில் நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்த பெண் பொதியப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது வீடு அமைந்துள்ள அம்பாள்குளத்திலிருந்து சில கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள யூனியன்குளத்தில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உரப்பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் சடலம் காணப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

நேற்றைய தினம் குறித்த பெண் காணாமல் போயிருந்த சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை அடுத்து விசாரணைகளை மேற்கொண்டிருந்த கிளிநொச்சி பொலிஸார் சந்தேகத்தின் பேரில் 19 வயது இளம் குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்திருந்தனர். கிளிநொச்சி - அம்பாள் குளத்தை சேர்ந்த 19 வயதுடைய இளம் குடும்பஸ்தரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பெறப்பட்ட தகவலுக்கு அமைவாக ஸ்கந்தபுரம் பகுதியில் பொதி செய்யப்பட்ட நிலையில் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த சடலம் சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கந்தபுரம் பரப்பாலம் பகுதியில் பொதி செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளது. குறித்த பாலத்தில் அதிகளவான முதலைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்னொருவரின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்து வீசியுள்ளதாக தெரியவருகின்றது.கிளிநொச்சி பொலிசார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

3வருடங்களுக்கு முன்பாக லண்டனில் இருந்து வந்து கிளிநொச்சி அம்பாள் குளம் உதயநகர் பகுதியில் உள்ள காணியை பார்ப்பதற்காக குறித்த பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந் இராசேந்திரம் இராசலட்சுமி (வயது-67) என்பவரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிட்த்தக்கது.

தொடர்புடைய செய்தி: 





Previous Post Next Post