யாழில் பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு!


யாழ்ப்பாணம், தென்மராட்சி - தனங்கிளப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்றைய தினம் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வெளியேறியதை அடுத்து அயலவர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக பொலிஸார் வீட்டை உடைத்து பாரத்த போது ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டிருந்தது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சடலமாக காணப்பட்ட நபர் புத்தூர் வடக்கு, புத்தூரை சேர்ந்த சுப்பிரமணியம் - சிவபாலன் (வயது-51) என அடையாளம் காணப்பட்டிருந்தது.

இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ரெலோ சார்பில் தெரிவான வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் எனவும் வலி. கிழக்கு பிரதேச சபை பட்ஜட் அமர்வு தொடர்பில் தகவல் தெரியப்படுத்துவதற்குத் தொடர்பு கொண்ட போதிலும் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த சடலம் இன்று நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு மீட்கப்பட்டு மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post