யாழ்.அல்லைப்பிட்டியில் 15 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த அத்தான்! மயக்க மருந்து கொடுத்து நண்பரும் துஸ்பிரயோகம்!!

யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் மனைவியின் தங்கையை துஸ்பிரயோகம் செய்ததுடன், மயக்க மருந்து கொடுத்து நண்பரையும் துஸ்பிரயோகம் செய்ய அனுமதித்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிரதேசத்திற்கு பொறுப்பான சிறுவர் உரிமை அதிகாரிகள் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தொடர்ச்சியாக சிறுமியினை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதுடன், சிறுமிக்கு மயக்க மருந்து வழங்கி தனது நண்பரையும் துஸ்பிரயோகம் செய்வதற்கு இடம்கொடுத்துள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபரின் நண்பரையும் கைதுசெய்யும் நடவடிக்கையில் ஊர்காவல் துறை பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்  நேற்று  நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Previous Post Next Post