
இந்த சம்பவம் ஊரெழு மேற்கு கணேசா வித்தியசாலைக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடைய சிவலோகேஸ்வரன் மதுரகன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
குறித்த நபர் இன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டு முற்றத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.