மேல் மாகாணத்தின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு!

மேல் மாகாணத்தில் ஏழு பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, நீர்கொழும்பு, களனி, நுகேகொட, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய மற்றும் கொழும்பு மேற்கு பொலிஸ் பிரிவுகளில் இன்று இரவு 9 மணி முதல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
Previous Post Next Post