பிரான்ஸில் கணவன், மனைவி, 2 பிள்ளைகள் தூக்கில் தொங்கி மரணம்!

பிரான்ஸின் மேற்குப் பகுதியான Rue François le Duc in Carantec (Finistère) இல் சிறிய கடலோர நகரமான Morlaix எனும் இடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இதில் 41 வயதான கணவன், 38 வயதான மனைவி, 11 மற்றும் 8 வயதுடைய இரு பிள்ளைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் நாய் ஒன்றும் அங்கு கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குடும்பப் பிரிவு காரணமாகவே இம் மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், கணவனே தனது மனைவி, பிள்ளைகளைக் கொலை செய்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் தாயார் தனது மகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாதுள்ளது எனப் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் அங்கு சென்ற பொலிஸார் இவ் நான்கு சடலங்கையும் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்தில் தடவியலாளர்கள், ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் வெளிப்புறக் காயங்கள் அல்லது எந்த உடல்களிலும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமைக்கான தடயங்கள் எதுவும் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post