எரிபொருள் விலை குறைப்பு!

எரிபொருள் விலை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டரொன்றின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 370 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 415 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பானது இன்று இரவு 9 மணி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏனைய எரிபொருட்களின் விலைகள் அதேவகையில் பேணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post