யாழில் வெட்டுக் காயங்களுடன் நபர் ஒருவர் மீட்பு!

யாழ்.வடமராட்சி - வல்லிபுரக் குறிச்சி பகுதியில் வெட்டுக் காயங்களுடன் நபர் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது. கடுமையான வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் காயங்களுடன் காணப்பட்டவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post