ஜேர்மனியில் சாதனை படைத்த தமிழர்கள்! அந் நாட்டுப் பத்திரிகைகள் தகவல்!!

தென்னிந்தியத் திரைபட இசை அமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி எதிர்வரும் 10.06.2023 அன்று ஜேர்மனியில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

குறித்த நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுக்கள் விற்பனை கடந்த திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு இணையத்தளங்கள் வழியாக ஆரம்பக்கப்பட்டது.

இதேவேளை இவ் விற்பனை ஆரம்பிக்கப்பட்டு 45 நிமிடத்துக்குள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுழைவுச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது ஜேர்மனி நாட்டைப் பொறுத்தவரையில், ஒரு இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டு விற்பனையில் பெரும் சாதனை என அந் நாட்டுப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்னன.
Previous Post Next Post