யாழில் வயோதிபப் பெண்ணை தாக்க வாளுடன் வந்த மாணவன்! (சிசிரிவி காணொளி)

யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு - முள்ளியான் பகுதியில் வாளுடன் சென்ற தேசிய கல்வியியற் கல்லுாரி மாணவன் வீட்டு கதவை சேதப்படுத்திய சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது.

இந்த சம்பவத்தால் குறித்த வீட்டில் தனிமையில் இருந்த வயோதிப தாய் ஒருவர் மிகுந்த அச்சம் கொண்டு அயலவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

நேற்றைய தினம் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் கல்வியற்கல்லூரி மாணவர் ஒருவரே வாளுடன் வந்து அச்சுறுத்தியது அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post