வேலணை பிரதேச சபையின் முன்னாள் செயலாளர் உயிரிழப்பு!

வேலணை பிரதேச சபையின் முன்னாள் செயலாளரும்,  சமூக பணியாளரும், சுயாதீன ஊடகவியலாளருமான செல்வராசா ரமேஸ் (வயது 53) உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்றைய தினம் (01.11.2022) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் மானிப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நாளை (03.11.2022) பிற்பகல் 1 மணிக்கு இறுதி கிரியைகள் இடம்பெற்று , நவாலி ஆரியம்பிட்டி இந்து மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற உதவியாளராகவும் , சமூக செயற்பாட்டாளராகவும் , யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் உள்ளிட்டவற்றில் சுயாதீன ஊடகவியலாளராகவும் அவர் பணியாற்றி வந்துள்ளார்.

அத்துடன் ஹேமலதா ஞாபாகார்ந்த நிதியத்தின் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post