
மட்டக்குளிய பிரதேசத்தில் வைத்தே இவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் அந்தப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரில் வந்த இருவர், இந்தப் படுகொலையை மேற்கொண்டனர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.