கல்வியங்காடு பகுதியில் கடைக்குள் புகுந்து அடாவடி; கொள்ளை – மூவர் சிக்கினர்

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் வாள்களுடன் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுவிட்டு 5 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருள்களை கொள்ளையிட்டுத் தப்பித்த கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் ஜனவரி மாத நடுப்பகுதியில் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோப்பாய் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் லக்சாந் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஜீவன்பாய் (சஜூவன் ), கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கிருஸ்ணன் மற்றும் கோப்பாயைச் சேர்ந்த 26 வயதுடைய சுதர்சன் ஆகிய மூவரே கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

முன்பகை காரணமாக இந்த அடாவடி மற்றும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post