ஊர்காவற்றுறையில் குளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு!! (படங்கள்)

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள குளம் ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த வேளை துவிச்சக்கர வண்டியுடன் குளத்தினுள் விழுந்து உயிரிழந்துள்ளார்.

ஊர்காவற்துறை - மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post