யாழில் எரிந்த நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்பு!

யாழ்.ஊர்காவற்றை பகுதியில் உள்ள வீடொன்றில் எரிந்த நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மனுவேற்பிள்ளை அசலின் பௌலினா மற்றும் யேசுதாசன் விக்டோறியா ஆகிய இரு பெண்களின் சடலங்கனே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் மறைந்த ஊடகவியலாளரும் கருத்தோவியருமான பயஸின் தாய் மற்றும் சிறிய தாயாரென தெரியவருகிறது.

குறித்த பெண்கள் இருவரும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும், தனியாக வசித்து வந்தவர்கள் எனவும் கூறப்படுகின்றது.

அவர்களது சடலத்திற்கு அருகாமையில் தீப்பெட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கொலையா? தற்கொலையா? என இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் கூறுகின்றனர்.

இச்சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post