மனைவி மற்றும் மாமி மீது கோடரியால் தாக்குதல்! மாமியார் பலி!! மனைவி ஆபத்தான நிலையில்!!! (படங்கள்)

வவுனியா - பெரியஉலுக்குளம் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்குள்ளாகிய மாமியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

பெரியஉலுக்குளம் பகுதியை சேர்ந்த டி.பி.அமராவதி (வயது60) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கணவம் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டில் இருந்த கோடரி மற்றும் கத்தியை கொண்டு கணவன், மனைவி மீது தாக்குதல் முன்னெடுத்துள்ளார்.

இதனை தடுக்க சென்ற மனைவியின் தாயார் மீதும் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மனைவியும் படுகாயமடைந்துள்ள நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post