பிரான்ஸில் மீண்டும் வேலை நிறுத்தம்! ஒட்டுமொத்தமாக முடக்க அழைப்பு!!

ஓய்வூதிய சீர்திருத்தத்தைக் கண்டித்து தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

வரும் மார்ச் 7 ஆம் திகதி இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. பொது போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் பாதிக்கப்படும் என அறிய முடிகிறது.

கிட்டத்தட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. பிரான்சின் ஒட்டுமொத்த செயற்பாட்டையும் முடக்கும் நோக்கோடு (“mettre la France à l'arrêt”) இந்த வேலை நிறுத்தம் இடம்பெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

போக்குவரத்து தடை தொடர்பான விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என RATP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post