யாழில் பாடசாலை நிர்வாகத்துக்குத் தெரியாமல் வெளிமாவட்டத்திற்குச் சுற்றுலா சென்ற மாணவ, மாணவிகள்!

யாழ். வேலணை மகாவித்தியாலய உயர்தர மாணவ, மாணவிகள் பாடசாலை நிர்வாகத்தின் அனுமதியின்றி சில நாள் சுற்றுலா சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அண்மையில் பாடசாலை விடுமுறை விடப்பட்டிருந்தபோது மாணவர், மாணவியர் 30 பேர் வெளிமாவட்ட சுற்றுலாவிற்கு சென்றுள்ளனர். இதற்காக மாணவிகள் ரூ.5,000 வீதம் செலுத்தியுள்ளனர். மாணவர்கள் சிலர் அதைவிட அதிக தொகை பணம் செலுத்தியுள்ளனர்.

சில நாட்களின் முன்னர் அந்த பாடசாலையின் அதிபர் ஓய்வுபெற்றார். ஆசிரியை ஒருவரிடமே பதில் அதிபர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதன்பின்னரே மாணவர்கள் சுற்றுலா சென்று வந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Previous Post Next Post