யாழில் உள்ள தனியார் விடுதியில் 12 வயதுச் சிறுமி சடலமாகவும் இன்னொரு பெண் மயக்க நிலையிலும் மீட்பு!

யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள Bright in தனியார் விடுதியில் 12 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுமியை தவிர மற்றுமொரு பெண்ணும் மயக்க நிலையில் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ் மாவட்ட நீதவான் நேரில் சென்று பார்வையிட்டார்.

அதேவேளை உயிரிழந்த சிறுமி திருகோணமலையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை குறித்த சிறுமியுடன் அறையில் தங்கியிருந்த மற்றுமொரு பெண் மயக்க நிலையிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

அதேவேளை உயிரிந்த சிறுமி குறித்த பெண்ணின் பேத்தி என அறியமுடிகின்றது.

குறித்த சிறுமி மூன்று நாட்களுக்கு முன்னரே சிறுமி இறந்து விட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post